நாடாளாவிய ரீதியில் நாளை (23) முதல் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் உள்ளிட்ட ஏனைய வாகனங்களை சோதனையிடும் விசேட போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் உள்ளிட்ட ஏனைய வானங்களால் இடம்பெற்ற விபத்துக்களை கருத்திற்கொண்டு தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்த போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை, நாடளாவிய ரீதியில் நாடு முழுவதும் இந்த போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்போது பிரதானமாக பொதுப் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் சோதனை செய்யப்படுவதுடன் அந்த பேருந்துகளின் சாரதிகள் குடிபோதையில் அல்லது போதைப்பொருளை பயன்படுத்தி செலுத்துகின்றனரா? என்பதும், தொடர்பிலும் சோதனையிடப்படவுள்ளது.
மேலும், பேருந்தை கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் செலுத்துதல், அதிவேகத்தில் வாகனம் செலுத்துதல், போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்துதல், பொருத்தமற்ற டயர் அல்லது பிற குறைபாடுகள் உள்ளதா? என சோதனை செய்து, அந்த சாரதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், மற்ற வாகனங்களிலும் சோதனை நடத்தப்படவுள்ளதுடன், அதற்காக, 24 மணி நேரமும் நாடு முழுவதும் போக்குவரத்து அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கையின் போது, கவனக்குறைவாக அல்லது போக்குவரத்து விதிகளை மீறி இயங்கும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் தொடர்பாக 119 மற்றும் 1997 ஆகிய குறுகிய தொலைபேசி இலக்கங்களுக்கு பொதுமக்கள் தகவல் வழங்க முடியும்.
மேலும், சம்பந்தப்பட்ட பகுதியின் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியின் கையடக்க தொலைபேசி இலக்கம் அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய போக்குவரத்து பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளின் கையடக்க தொலைபேசி இலக்கங்களுக்கும் தகவல்களை வழங்க முடியும்.
அத்துடன், போக்குவரத்து விதிகளை மீறுவது அல்லது பிற குற்றங்கள் தொடர்பான வீடியோக்கள் இருந்தால், அந்த வீடியோக்களை அந்த தொலைபேசி எண்களுக்கு வட்ஸ்அப் மூலம் அனுப்பவும் முடியும்.
அந்த தகவல்களின்படி, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
அந்தந்தப் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு.