ஜனாதிபதியின் இந்தியா, சீனா தொடர்பான தொடர்ச்சியான விஜயங்கள், இலங்கை மீண்டும் அதன் பொறிக்குள் சிக்கியிருப்பதனை வெளிப்படுத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது இலங்கையின் அரசியல் மிகவும் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயம் கடந்த 15 தொடக்கம் 17ஆம் திகதிவரை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி 12 தொடக்கம் மீண்டும் சீனாவுக்குச் செல்ல இருக்கின்றார்.
இதிலிருந்து இந்திய சீனா அதிகாரப் போட்டியிலே இலங்கை மீண்டும் சிக்கியிருப்பதாகவே உணர முடிகின்றது.
சர்வதேச அரசியல் அவ்வாறு இருந்தாலும் தற்போது ஆட்சியமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் பல்வேறு தேர்தல் கால வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது” என்றார்.