ஆட்டத்தை ஆரம்பித்த அநுர: சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட ராஜபக்‌சவின் மகன்

0

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் (Mahinda Rajapaksa) மகன் யோஷித்த ராஜபக்‌சவை (Yoshitha Rajapaksa) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சொத்துக்களை பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், எதிர்வரும் மூன்றாம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய நிதி மோசடி 

அத்தோடு, பாரிய நிதி மோசடி மற்றும் கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஐந்து முன்னாள் அமைச்சர்களின் விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

ஆட்டத்தை ஆரம்பித்த அநுர: சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட ராஜபக்‌சவின் மகன் | Yoshitha Rajapaksa Summoned To Appear Before Cid

குறித்த ஐந்து பேர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top