ஒரு மாகாணத்தில் மாத்திரம் 7,000 பெண் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர்.

Dsa
0

 



இலங்கையின் தென் மாகாணத்தில் சுமார் 7,000 பாலியல் தொழில்சார்ந்த பெண்கள் இருப்பதாக மனித மற்றும் இயற்கை வள அபிவிருத்தி அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளரான கே.பி. சஞ்சீவ


காலியில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், "இலங்கை பெண் பாலியல் தொழிலாளர்கள் மற்ற வேலைகளுடன் ஒப்பிடுகின்ற போது வித்தியாசமான முறையில் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். இதனால், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் சமூகத்தில் பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர்.


பாலியல் தொழில் சார்ந்த பெண்கள் தங்களுடைய குடும்பங்களிலும் சக சமூகத்திலும் நிராகரிக்கப்படுகின்றார்கள். மேலும் சேவை வழங்கல் ஓரங் கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளுக்குட்பட்டதாகும்.


கடந்த கொரோனா காலத்தின் போது பொருளாதார ரீதியாக கஷ்டன்பட்டு, வேலைகளை இழந்ததால், பெண் பாலியல் தொழிலாளிகள் அதிகமாக வேலைக்கு செல்லும் போக்கு ஏற்பட்டுள்ளது.


நுண்நிதி கடன்கள் காரணமாக சில பெண்கள் பாலியல் சேவைகளை வழங்க தூண்டப்படுவதையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். பல பெண் பாலியல் தொழிலாளர்கள் வேறு வேலைகளுக்கும் திருப்பி விடப்பட்டுள்ளனர்.


எனினும், வேலை செய்யும் இடத்திற்குச் சென்ற ஓரிரு நாட்களுக்குப் பின்னர், குறித்த பெண் பாலியல் தொழில் செய்பவர் என்று தெரிய வந்ததன் காரணமாக வேலை இழந்த ஒரு சில சம்பவங்களும் உண்டு. ஒரு அமைப்பாக, நாங்கள் எல்லா நேரங்களிலும் பெண் பாலியல் தொழிலாளர்களை மேம்படுத்துவதற்காக உழைக்கின்றோம்.


தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுதல் போன்ற சட்டப் பணிகளுக்கு எங்களுடைய அமைப்பு ஆதரவை வழங்குகின்றது. அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பாக செலுத்துகின்நனர். 


எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய அறிவுறுத்துகின்றது. கணிசமான எண்ணிக்கையிலான பெண் பாலியல் தொழிலாளர்கள் இத்தகைய திட்டங்களுடன் தொடர்புடையவர்களாவர்.


மனித மற்றும் இயற்கை வள மேம்பாட்டு அறக்கட்டளை பெண் பாலியல் தொழிலாளர்களுக்கான நலத்திட்டத்தை தயாரிக்க பாராளுமன்றத்தில் பொது பிரதிநிதிகளிடம் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள இவர் , அவர்கள் ஒரு அமைப்பாக தொடர்ந்து தீவிரமாக தலையிடுவார்கள் என்றும் கே.பி. சஞ்சீவனி என்பவர் தெரிவித்தார் .

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top