19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (08) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷிற்கு இடையிலான போட்டியில் பங்களாதேஷ் அணி 59 ஓட்டங்களால் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.
Dubai இல் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 49.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் அதிகப்பட்சமாக Rizan Hossan 47 ஒட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Yudhajit Guha, Chetan Sharma மற்றும் Hardik Raj தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் 199 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 35.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அதிகப்பட்சமாக அணி தலைவர் Mohamed Amaan 26 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Iqbal Hossain Emon, Azizul Hakim தலா 3 விக்கெட்டுகளையும், Al Fahad 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.