விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி பலி

 


குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல வீதியில் கம்புராபொல பாலத்திற்கு அருகில் குளியாப்பிட்டியவிலிருந்து ஹெட்டிபொல நோக்கிச் சென்ற ஜீப் வண்டியொன்று புல்கமுவ ஓயாவில் வீழ்ந்ததில் இன்று (23) காலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரேன் உதவியுடன் ஆற்றில் வீழ்ந்த ஜீப் வண்டியை மேலே இழுத்ததில் வாகனத்தில் சிக்கிய இருவர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 27 வயதுடைய குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவரும் சகோதரர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற இடம் வளைவுகள் நிறைந்த இடம் எனவும், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் உள்ள ஓடையில் விழுந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலங்கள் குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section