புஸ்ஸல்லாவ - மெல்பட்வத்த பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (12) மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு பேர் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
50 வயதுடைய மெல்பட்வத்த, புஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஏனைய 04 பேர் சிகிச்சை பெற்று வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.