மகள் பரீட்சைக்கு செல்ல மறுத்ததால் தனக்கு தானே தீ மூட்டி உயிரை மாய்த்த தாய்

Dsa
0 minute read
0

 




கடந்த ஜூலை 10 ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் நடன பாட செய்முறைப் பரீட்சைக்கு செல்வதற்கு தனது மகள் மறுப்பு தெரிவொத்ததால் தாயார் தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார்.   


பற்றிமா வீதி, பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய 05 பிள்ளைகளின் தாய் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


மகள் நடன பாட செய்முறை பரீட்சைக்கு செல்லாவிட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரிவேன் என்று தெரிவித்து தனது உடலில் மண்ணெண்ணெய்யையும் ஊற்றியுள்ளார்.  அதன் பின்னர் தீக்குச்சியை பற்ற வைத்திருந்த நிலையில் மகளிடம் பேசிக் கொண்டு இருந்த வேளையில் திடீரென அவரது ஆடையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.   


இந்நிலையில், அவர் மீது பரவிய தீ அணைக்கப்பட்டு 0தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இடம் மாற்றப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குற்ப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top