வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞன் சடலமாக மீட்பு

0

 


முல்லைத்தீவு மல்லாவி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்தில் இருந்து இன்று (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை 27 வயதான ஆனந்தரசா சஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் 20 இலட்சம் பணத்தினை கொண்டு யோகபுரத்தில் இருந்து பாண்டியன் குளத்திற்கு சென்ற இளைஞன் இரவு 8.40 வரை நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர் அவரது தொலைபேசி செயலிழந்துள்ளது.

குறித்த இளைஞனின் தொடர்பு கிடைக்காத நிலையில் அவனது நண்பர்கள் தேடியபோது இன்று அதிகாலை 3.00 மணியளவில் பாண்டியன்குளம் குளக்கரையில் மோட்டார் சைக்கிள் இனங்காணப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் இளைஞனை தேடியும் காணாத நிலையில், வவுனிக்குளத்தின் மூன்றாது நீர் சுருங்கையில் (நீர் கொட்டு) பகுதியில் உடலம் கிடப்பது இனங்காணப்பட்டு பிரதேச ஶ்ரீவாசிகளால் உடலம் மீட்கப்பட்டு வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பாண்டியன் குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணையினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

குறித்த இளைஞன் கனடாவிற்கு செல்வதற்காக தயாரான நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதுக்குடியிருப்பு விசேட நிருபர்

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top