கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற தொடருந்துடன் லொறி மோதி கோர விபத்து

Dsa
0

 


கொலன்னாவையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு(Bandaranaike International Airport) எரிபொருள் ஏற்றிச் சென்ற தொடருந்துடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த விபத்து ராகம(Ragama) பேரலந்த தேவாலயத்திற்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது.


விபத்தில் தொடருந்து இயந்திரம் சேதமடைந்துள்ளதாகவும், லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் விபத்தின் போது அருகில் இருந்த மரக்கறி விற்பனை நிலையம் பலத்த சேதம் அடைந்ததுடன் அதன் உரிமையாளர் அதனை பூட்டி விட்டு சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.


விபத்து காரணமாக தொடருந்து சாரதியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top