ஸெய்ன்ஸித்தீக்
அறிவியல் கலைகளைப் பொறுத்தவரையில் அதற்கு ஆரம்பம் என்ற ஒரு விடயம் இருக்கிறது. நாம் வாழ்வது அறிவியல் யுகம். அறிவு மூலதனத்தின் பாய்ச்சல் அனைத்தையும் நிர்ணயிக்கும் யுகம். அவற்றிற்கான சவால்களை எதிர்கொள்வதற்கு ஒழுக்கமுள்ள மாணவர் சமூகத்தை உருவாக்க அனைவரும் முயற்சிப்பதற்கான ஆரம்பமே இன்று வித்தியாரம்ப விழாவாக நாடு முழுவதும் நடைபெற்று வரும் அதேவேளை இறக்காமல் கல்வி கோட்டத்திலும் பல பாடசாலைகளில் நடைபெற்றன.
நடப்பு ஆண்டுக்கான தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் வித்யாதின நிகழ்வுகள் இன்று 2024.02.22 ஆம் திகதி வியாழக்கிழமை கமு/சது/றோயல் கனிஷ்ட கல்லூரியின் அதிபர் எம். ஏ. எம். பஜீர் அவர்களின் தலைமையில் விமர்சியாக இடம்பெற்றது.
பிரதம அதிதியாக உதவிப் பிரதேச செயலாளர் எம். ஏ. சீ. அஹமட் நஸீல் அவர்களும் கௌரவ அதிதியாக தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் அபூபக்கர் நளீம் அவர்களும் விஷேட அதிதிகளாக ஹம்திய்யா ஹிபிழ் மத்ரஸாவின் தலைவர் எம்.ஏ. ஹாதாஸ் மௌலவி, ஏ.எல். எம். சியாட் நிலைய பொறுப்பதிகாரி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, வை.எல்.ஜுஹீர் உப தலைவர் இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் ஆதம் கனி அஸ்வர் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்