அரசாங்கத்தில் தொழில் வாய்ப்பு – முக்கிய அறிவுறுத்தல்!

 


புதிதாக 2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களுக்கான பரீட்சை பெறுபேறுகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் அரச நிர்வாக அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளன.

தகுதி பெற்ற சுமார் 4,000 பேரை நேர்முகப் பரீட்சைக்காக அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலமாக கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படாமையினாலும்,பணிபுரிந்த சிலர் ஓய்வு பெற்றுள்ளமையினாலும் பதவி வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் 380 ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

உதவி ஆணையாளர்கள் 221 பேருக்கும் அலுவலக உதவியாளர்கள் 71 பேருக்கும் முகாமைத்துவ ஊழியர்கள் 88 பேருக்கும் வெற்றிடங்கள் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section