தமிழக அணிக்கு எதிரான போட்டியில் கர்நாடக அணியில் விளையாடிய ஹொய்சலா கே என்கிற வீரர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில், தமிழ்நாடு - கர்நாடக அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் கர்நாடக அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டிக்காக கர்நாடக அணியில் விளையாடிய ஹொய்சலா கே என்கிற வீரர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
34 வயதான ஹொய்சலா தமிழக அணிக்கு எதிரான போட்டிக்குப் பின், தனது அணி வீரர்களுடன் இரவு உணவு உண்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஹொய்சலா மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு கிரிக்கெட் மைதானத்தில் இருந்த மருத்துவர்கள் உடனடியாக அவரச சிகிச்சை அளித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனளிக்காத நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக அவரரை பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் கிரிக்கெட் வீரர் ஹொய்சலா வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஹொய்சலா 25 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கர்நாடகா அணிக்காக விளையாடியுள்ளார். மேலும் அவர் கர்நாடக பிரீமியர் லீக் தொடரில் ஷிவமொக்கா லயன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.