சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வீரத்திடல் அல்- ஹிதாயா மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்துக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களை பாடசாலையுடன் இணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட வித்தியாரம்ப விழா நேற்று (22) பாடசாலை அதிபர் திருமதி ஏ.எம்.முனாஷிர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் பிரதம அதிதியாகவும், அல்-கரீம் பவுண்டேஷன் பணிப்பாளரும், முன்னாள் கைதொழில் மற்றும் வணிக அமைச்சரின் இணைப்புச் செயலாளரும், சமூக சேவையாளருமான சீ.எம்.ஹலீம் (LLB) கௌரவ அதிதியாகவும், கல்முனை அல்-ஹாமியா அரபுக்கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் ஏ.சீ.தஸ்தீக் (மதனி), முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.சுபைடீன் ஆகியோர் விசேட அதிதிகளாகவும், உதவி அதிபர் ஏ.எம்.சாலித்தீன் மற்றும் பிரதி அதிபர் ஏ.சீ.றக்ஷான் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது பாடசாலையுடன் இணைந்துகொண்ட தரம் 1 மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.