ராஜபக்ச குடும்பத்தை ஆட்டங்காண வைத்துள்ள சிங்கள மக்கள்

 


நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளில் மக்கள் மத்தியில் மிகக்குறைந்த பிரபல்யம் கொண்ட அரசியல்வாதிளாக ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

அரசியல்வாதிகளின் பிரபல தன்மை குறித்து சுகாதார கொள்கை நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு அமைய இந்தத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதற்கமைய, மிகக் குறைந்த பிரபல்யத்தன்மை கொண்ட அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ள நிலையில் அதற்கு அடுத்த இடத்தில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச உள்ளார். அவர்களின் மதிப்பெண்கள் முறையே -73 மற்றும் -64 ஆகும்.

கோட்டாபய ராஜபக்ச -51 மற்றும் மகிந்த ராஜபக்ச -52 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

ராஜபக்ச குடும்பத்தை ஆட்டங்காண வைத்துள்ள சிங்கள மக்கள் | A Shocking Result About Rajapaksha Family

மக்கள் மத்தியில் அதிகம் பிரபல்யத்தன்மை கொண்டவராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுதர்சன்னி பெர்னாண்டோ புள்ளே உள்ளார். அவருக்கு 8 புள்ளிகள் உள்ளன.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவிற்கு மக்கள் மத்தியில் சாதகமான நிலைமை உள்ளதுடன் அவரது மதிப்பெண் 1 ஆகக் காட்டப்பட்டுள்ளது

ராஜபக்ச குடும்பத்தை ஆட்டங்காண வைத்துள்ள சிங்கள மக்கள் | A Shocking Result About Rajapaksha Family

அனுரகுமார திஸாநாயக்க - 16 மதிப்பெண் பெற்றுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் - 39 புள்ளிகளை பெற்றுள்ளனர்.

இந்த நாடு மிகவும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க ராஜபக்ச குடும்பமே காரணம் என மக்கள் மத்தியில் கருத்தியல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section