கடும் வெப்பமான காலத்தில் அவதானமாக இருப்போம்




கடும் வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் துறையினர் சுகாதார நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், அதிக உடற்பயிற்சி செய்பவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிக வெப்பமான காலநிலையின் எதிர்மறையான உடல் விளைவுகளைக் குறைக்க எடுக்கக்கூடிய முக்கிய நடவடிக்கை, அதிக தண்ணீர் குடிப்பதாகும், மேலும் உடல் உழைப்பு ஏற்பட்டால், ஒரு மணி நேரத்திற்கு 2 முதல் 4 கிளாஸ் தண்ணீர் குடிப்பது பொருத்தமானது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சில விசேட அறிவுறுத்தல்கள் 

01. முடிந்தவரை வீட்டிற்குள் அல்லது நிழலான பகுதிகளில் இருப்பதை அவனத்திற் கொள்ள வேண்டும்.

02. குளிரூட்டிகள் அல்லது மின்விசிறிகளைப் பயன்படுத்த வேண்டும்

03. குளிர்ந்த நீரில் உடலை கழுவவும் அல்லது குளிர் நீரில் நீராட வேண்டும்.

04. வெளிர் நிற அல்லது வெளிர் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

05. சூரிய ஒளியில் இருந்து உடலைப் பாதுகாக்க தொப்பி அணிய வேண்டும்.

06. குடைகளை பயன்படுத்த வேண்டும்.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section