மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய பெண் பயணியிடம் இருந்து 22 பாம்புகள் மீட்கப்பட்டன. பெண் கொண்டு வந்த பைகளில் பல்வேறு வகையை சேர்ந்த பாம்புகள் தனித்தனியே பிளாஸ்டிக் டப்பாக்களில் வைக்கப்பட்டு இருந்தன. அதிகாரிகள் நடத்திய சோதனையில் பெண் பாம்புகளை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின் பெட்டிகளை திறந்து பாம்புகளை அதிகாரிகள் நீண்ட கம்பி மூலம் வெளியே எடுத்தனர். இவ்வாறு செய்யும் போது, சில பாம்புகள் பெட்டியில் இருந்து ஆக்ரோஷமாக வெளியே வந்தன. கோலாலம்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு பாம்புகளுடன் வந்த பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர் கொண்டுவந்த பையில் இருந்து பச்சோந்தியும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.