பால் விலை இன்று முதல் அதிரடி உயர்வு

0

 


இந்தியாவின் தமிழகம் மட்டுமின்றி தென்னிந்திய அளவிலும் பிரபல பால் விற்பனை நிறுவனமாக ஹட்சன் முன்னிலை வகிக்கிறது. இது தங்களின் பால், தயிர் உள்ளிட்டவற்றின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இது இன்று (14) முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

 

இதையொட்டி விநியோகஸ்தர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆரோக்யா பால் ஒரு லிட்டருக்கு 4 ரூபாயும், ஒரு கிலோ தயிர் 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

 

ஒரு லிட்டர் ஃபுல் க்ரீன் பால் விலை 82 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு டீ கடைகள், உணவகங்கள், அலுவலக கேண்டீன்கள் ஆகியவற்றில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் இவை தனியார் பால் நிறுவனங்களை தான் பெரிதும் சார்ந்துள்ளன.

 

குறிப்பாக டீ, காபி, பால் குடிக்கும் சாதாரண மக்கள், தினக்கூலி ஊழியர்களின் பாக்கெட்டை பதம் பார்க்கும் என்பதில் சந்தேகமில்லை. ஹட்சன் நிறுவனம் பால் விற்பனை விலையை உயர்த்தியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

இதுபற்றி தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம் தெரிவிக்கையில், ஹட்சன் நிறுவனமாக தன்னிச்சையாக இத்தகைய முடிவை எடுத்துள்ளது.

 

பால் விற்பனை என்பது சாதாரண மக்களின் பல்வேறு விடயங்கள் உடன் சங்கிலி தொடர்பு போன்ற பிணைப்பை கொண்டிருக்கிறது. எனவே அடுத்தடுத்து பலவற்றில் எதிரொலிக்கும். அதுமட்டுமின்றி மற்ற தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்துவதற்கு உந்துதலாக அமையும் எனக் தெரிவிக்கின்றனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top