ஆசிரியர்களினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் மாணவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு..!
கணித ஆசிரியர் ஒருவர், பத்தாம் வகுப்பில் படிக்கும் எட்டு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்,
கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
பெற்றோர்கள் பலமுறை பொலிஸ் நிலையத்தில் அளித்த புகார்களைத் தொடர்ந்து கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டதாகவும்,
பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் எட்டு மாணவிகள் ஆசிரியரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார்தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட கணித ஆசிரியரை பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆசிரியர்களினால் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி வருகின்ற சம்பவங்கள்,
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான கீழ்த்தருமான ஆசிரியர்களிடமிருந்து பெற்றோர்கள் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
பல நாட்களாக காணாமல் போன மாணவி நேற்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில்,
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 30 வயது ஆசிரியர் ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார்.
எனவே இந்த ஆசிரியருக்கும் அந்த மாணவிக்கும் என்ன நடந்தது..?
இன்னும் விசாரணைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
அவ்வாறு இருக்க இன்னும் தொடர்ச்சியாக பல சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல இன்னல்களுக்கு மத்தியில் எமது குழந்தைகளை கல்வி அறிவை வளர்ப்பதற்காக நாம் பாடசாலைக்கு அனுப்புகின்றோம்.
ஆனால் அங்கு ஆசிரியர்களுடைய இந்த கீழ்த்தரமான செயற்பாட்டில்,
எத்தனையோ மாணவர்கள் கல்வியை பாதையில் விட்டு செல்கின்றனர்.
எனவே இவ்வாறான ஆசிரியர்களுக்கு கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்.
இவர்கள் சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
இன்னும் எத்தனையோ சம்பவங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது.
எனவே உங்களுடைய குழந்தைகளை பாதுகாப்பது பெற்றோராகிய உங்கள் கடமை...