S.M.Z.சித்தீக்
2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் முன்பாக கடந்த பெப்ரவரி மாதம் (27) ஆம் திகதி ஒரு மணித்தியால கவனயீர்ப்புப் பேரணியும், பணிப் பகிஸ்கரிப்பையும் மேற்கொண்டிருந்த போது தமது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய அரச தரப்பினர் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காததன் விளைவாக,
இன்று மார்ச் (17) ஆம் திகதி கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மீண்டும் கவனயீர்ப்புப் பேரணியும் 3மணி நேர பணிப்பகிஸ்கரிப்பும் இடம்பெற்றது.
இதே வேளை குறித்து கவனயீர்ப்பு போராட்டத்தை கடந்த மார்ச் 6 ஆம் திகதி நடாத்துவதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில் இதே மார்ச் 5ஆம் திகதி சுகாதார அமைச்சரினால் சுமுகமான தீர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு 6ஆம் திகதி நடைபெற இருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடை நிறுத்தப்பட்டது.
மனித உயிர்களோடும் உணர்வுகளோடும் ஒன்றித்துக் காணப்படும் அரச தாதியர் சேவைக்கு இவ்வரசு வழங்கும் மரியாதையும், மகத்துவமும் ஏனைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை கணிசமான அளவு குறைப்பது அல்லது நிறுத்துவதா? எனும் கேள்வி தொடர்ந்துகொண்டே செல்கிறது.