(செய்தியாளர் எம்.எஸ்.எம். சஜீ)
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான விஷேட கலந்துரையாடல் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம் பெற்றது.
இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்ன சேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கொண்டனர்.
சந்திப்பில் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்கள் வழங்கவேண்டும் என ஹிஸ்புல்லாஹ் விடுத்த கோரிக்கையினை கிழக்கு ஆளுநர் செய்வதாக உறுதியளித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவின் செயலாளர் சட்டமாணி றுஸ்வின் முகமதும் பங்கேற்று இருப்பதை படத்தில் காணலாம்.