ஒருவருக்கு 3 ஆண்குறிகள் இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மிகவும் அரிய பிறவி குறைபாடு என்ற வகையிலும் இது உலகில் இரண்டாவது நிகழ்வு ஆகும். மருத்துவ உலகில் இது ‘டிரிஃபாலியா’ என்று அழைக்கப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு ஈராக் நாட்டின் டுஹோக்கில் டிரிஃபாலியா குறைபாட்டை மருத்துவர்கள் முதன் முதலில் பதிவு செய்தனர். அப்போது குழந்தை ஒன்று, 3 ஆணுறுப்புகளுடன் பிறந்தது.
பர்மிங்காம் மருத்துவப் பள்ளியின் மாணவர் ஆராய்ச்சியாளர்கள் 78 வயது முதியவரின் சடலத்தை ஆய்வு செய்தனர். முதியவர் தனது உடலை ஆய்வுக்கு பயன்படுத்த அனுமதி அளித்த நிலையில், அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது.
அந்த முதியவர் தன் வாழ்நாள் முழுக்க தன் நிலையை அறியாமலேயே வாழ்ந்திருக்கலாம் என்று தெரிகிறது. டிஃபாலியா, அல்லது இரண்டு ஆண்குறிகள் கொண்ட நிலை, டிரிபாலியாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் பொதுவான நிகழ்வு ஆகும்.
உலகில் ஐந்து முதல் ஆறு மில்லியன் மக்களில் ஒருவரை மட்டுமே இது பாதிக்கிறது. இன்றுவரை சுமார் 100 பேருக்கு மட்டுமே டிஃபாலியா ஏற்பட்டுள்ளது.
ஜர்னல் ஆஃப் மெடிக்கல் கேஸ் ரிப்போர்ட்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, டிரிஃபாலியாவின் ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது 3 தனித்தனி ஆண்குறி தண்டுகள் இருப்பதால் வகைப்படுத்தப்படும் ஒரு அரிய பிறவி நிலை என வரையறுக்கப்படுகிறது.