கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களிடம் வளாத்தப்பிட்டி மக்கள் சிகிச்சைகளைப் பெறுவதிலுள்ள கடினங்கள் மற்றும் போக்குவரத்துப்பிரச்சினை என்பனவற்றை சுட்டிக்காட்டியதன் விளைவாக உடனடியாக அங்கு வாரத்தில் ஒரு நாள் இயங்கும் விதத்திலான சிகிச்சை நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் இதற்கான நடவடிக்கைகளை மல்வத்தை பிரதேச வைத்தியசாலை மற்றும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளதுடன் எதிர்வரும் 2024.10.23 ஆம் திகதி இதனை உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது