GCE (O/L) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்.

 



02 வாரங்களுக்குள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sushil Premajayantha) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


குறித்த விடயத்தை இன்று (14) காலை இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள், கால அட்டவணைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகள் என்பனவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்த முடியுமென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




பாடசாலை தவணை


எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை ஜனவரி 02 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.


ஆனால், 0 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக 02 வாரங்கள் பாடசாலைகளை நடாத்த வேண்டியுள்ளது.


இதன்படி, 2025 ஜனவரி 20 ஆம் திகதி முதலாவது பாடசாலை தவணையின் முதல் நாள் ஆரம்பமாகின்றது. அதற்குள் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் அனைத்தும் தயாராக இருப்பதையும் உறுதி செய்து கொண்டுள்ளோம் என கல்வியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section