பெரிய வெங்காயம் இறக்குமதியால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பெரிய வெங்காய விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 120 முதல் 150 ரூபா வரை உள்ளது.
இதனால், உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை குறையும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பெரிய வெங்காய விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பெரிய வெங்காயத்திற்கு விசேட வரி
இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு விசேட வரி விதிக்குமாறு பெரிய வெங்காய விவசாயிகள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், பெரிய வெங்காயத் தோட்டங்கள் அதிகளவில் மேற்கொள்ளப்படவில்லை எனவும், விவசாய இரசாயனப் பொருட்களின் விலை அதிகரித்து பாரிய செலவினங்களை தாங்குவதாகவும் விவசாயிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.