தேர்தல் வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல் இதுவென நம்புவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல் இதுவென நம்புவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (21) மாலை ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த காலப்பகுதியில் எந்த வன்முறையும் பதிவாகவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.
இந்த ஆண்டு 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
பல மாவட்டங்களில் 75%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
1,713 வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.