கையிலிருக்கும் கிளியை விட்டுவிட்டு மரத்திலிருக்கும் குருவியைப் பிடிக்க முயலாதீர்கள் : பிரசாரத்தில் ஹரின்

 



சரியான தீர்மானத்தை எடுக்காவிட்டால், இருள் யுகத்தில் வாழ வேண்டும் என்பதை மறக்காமல் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவே, கையிலிருக்கும் கிளியை விட்டுவிட்டு மரத்திலிருக்கும் குருவியைப் பிடிக்கச் சென்றால் இரண்டும் கிடைக்காது என்பதை மக்கள் நினைவில்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ( Harin Fernando) தெரிவித்துள்ளார்.


பேருவளை கடற்கரை விளையாட்டரங்கில் நேற்று (13) பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


15 இலட்சம் பேர்

மேலும் உரையாற்றுகையில்,  "இன்று இருக்கும் நிலை வேண்டுமா? கஷ்ட காலத்தை நோக்கி மீண்டும் செல்ல வேண்டுமா? என்பதை இன்னும் 8 நாட்களில் தீர்மானிக்க முடியும்.


இதே இடங்களில் இரண்டு வருடங்களுக்கு முன்பு எத்தனை நாட்கள் வரிசையில் நின்றோம் என்பதை மறக்கக்கூடாது.


பிரச்சினைகளிலிருந்து மீண்டு வரும் வேளையில் வாய்ச்சொல் வீரர்களை நம்பி மாற்றத்தை செய்து பார்க்கச் சிந்திப்பது வேடிக்கையானது. அதேபோல் மக்கள் அந்த நிலைமைகளை மறந்திருப்பது வேதனைக்குரியது.


வெளிநாடுகளில் வேலை செய்யும் 15 இலட்சம் பேர் ஜே.வி.பியின் திசைகாட்டிக்கு வாக்களிக்க வருவார்கள் என்று சொல்கின்றார்கள்.


அப்படி வருவதாயின் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் விமானங்களை இலங்கைக்குக் கொண்டு வர வேண்டியிருக்கும். இவ்வாறான பொய்களை மக்கள் நம்புவது கவலைக்குரியது” என்றும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section