எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் 50,000 கடவுச்சீட்டுக்கள் நாட்டுக்குக் கிடைக்கும் என்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என்றும், அதுவரை புதிய கடவுச்சீட்டுகளை வழங்குவது நாளாந்தம் 1,000 ஆக இருக்க வேண்டும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக திணைக்களம் அறிவித்தல் வெளியிட்டுள்ள நிலையில், குறித்த முயற்சிக்கான ஒப்பந்தம் சர்வதேச
நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.