தேர்தல் பெறுபேறு தாமதமாகும்? குழப்பம் ஏற்பட்டால் வாக்கு பெட்டி சூனியமாக்கப்படும் மொத்தப் பெறுபேற்றை பாதித்தால் மீண்டும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை





நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஏதாவது ஒரு வாக்களிப்பு நிலையத்தில் முறைகேடு இடம்

பெற்றால் வாக்களிப்பு நிலையத்தின் தலைமை அதிகாரியின் அறிக்கை இணங்க அவசியம் ஏற்படும் அவ்வாக்கு பெட்டி சூனியமாக்கப்படும்.


அத்துடன் உரிய வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகள் மொத்த பெறுபேறுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமாக இருந்தால்  அந்நிலையத்தில் மீண்டும் வாக்களிப்பு நடத்தப்படும் ஆனால் புதிதாக வாக்களிப்பு நடத்தப்பட்டு அதன் பெறுபேறுகள் கணக்கிடப்படும் வரை

மொத்த பெறுபேறுகள்

அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் RMAL ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


இவ்வாறான செயற்பாடுகளில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவே அநாவசியமான முறையில் வாக்களிப்பு நிலையங்களில் நடமாடுதல் வன்முறைகளில் ஈடுபடுதல் தேர்தல் நடவடிக்கைகளை குழப்புதல்

ஆகிய விடயங்களில் தவிர்ந்து நடந்து கொள்ளு மாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section