குவைத் நாட்டின் துணைப் பிரதமரான இமாத் அதீகி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். குவைத் நாட்டின் எண்ணெய் வளத்துறை அமைச்சரான இவரை குவைத் மன்னர் மிஷால் அல்-அகமத் அல்-ஜாபர் அல்-சபா பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளதாக குவைத் அரசின் செய்தி நிறுவனம் நேற்று (09) தகவல் வெளியிட்டுள்ளது.
அத்தோடு, குவைத் நிதி அமைச்சரும், பொருளாதார விவகார அமைச்சருமான நூரா பசாமுக்கு எண்ணெய் வளத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுவதாகவும் மன்னர் அறிவித்துள்ளார். ஆயினும், குவைத் நாட்டின் துணைப் பிரதமரான இமாத் அதீகியின் பதவி நீக்கத்துக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.