ஆடைத் தொழிற்சாலைகளுட்பட 219 தொழிற்சாலைகளை மூடுவதற்கு பங்களாதேஷ் நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
சில தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றன.
தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் காரணமாக 86 ஆடைத் தொழிற்சாலைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
வன்முறைகளைத் தடுப்பதற்காக தொழிற்சாலைகளுக்கு முன்பாக மேலதிகமான பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.