பின்வரும் 10 அரச துறையினருக்கு சம்பள உயர்வு வழங்க தீர்மானம்.

 


2025 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 அரச துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதன்படி, தரம் III அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 5,450 ரூபாவினாலும், தரம் II அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 8,760 ரூபாவினாலும், தரம் I அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 10,950 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், தரம் III சாரதியின் சம்பளம் 6,960 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது. அத்தோடு, தரம் II சாரதியின் சம்பளம் 9,990 ரூபாவினாலும், தரம் I சாரதியின் சம்பளம் 13,020 ரூபாவினாலும் சிறப்புத் தர ஓட்டுநருக்கு 16,340 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளன.


தரம் III சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்/ விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களுக்கு 8,340 ரூபாவும், தரம் II உதவியாளர்களுக்கு 11,690 ரூபாவும் தரம் I உதவியாளர்களுக்கு 15,685 ரூபாவும் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.


முகாமைத்துவ உதவியாளரின் மாதாந்தச் சம்பளம் தரம் III க்கு 10,140 ரூபாவும், தரம் II க்கு 13,490 ரூபாயும், தரம் I க்கு 17,550 ரூபாவும் அதிகரிக்கப்படவுள்ளது.


அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தரம் III, II மற்றும் I க்கு முறையே 12,710, 17,820, 25,150 ரூபாய் சம்பவளம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப சுகாதார பணியாளர்களின் தரம் III பிரிவினரின் சம்பளம் 12,885, ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், தரம் II க்கு 17,945 ரூபாவும், தரம் I க்கு 25,275 ரூபாவும் அதிகரிக்கப்படவுள்ளது.


ரேடியாலஜிஸ்ட் (Radiologist) மற்றும் மருந்தாளுனர்களின் (Pharmasist) தரம் IIIக்கு 13,280 ரூபாவும், தரம் IIக்கு 18,310 ரூபாவும், தரம் I க்கு 25,720 ரூபாவும் அதிகரிக்கப்படவுள்ளது.


தரம் III, II மற்றும் I செவிலியர்களின் சம்பளம் முறையே 13,725, 18,835 மற்றும் 26,165 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.


இதனிடையே, பாடசாலை அதிபர்களின் III, II, I தரங்களுக்கான சம்பளம் ஆகியன முறையே 23,425, 29,935 மற்றும் 39,595 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


05 பிரிவுகளின் கீழ் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களின் சம்பளம் 17,480 ரூபாவாகும். பட்டதாரி ஆசிரியர்களின் சம்பளமானது 19,055 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section