பாரிஸ் பரா ஒலிம்பிக்கில் பிரிட்டனைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனையான ஜொடீ கிரின்ஹாம், மகளிருக்கான வில்வித்தைப் போட்டியில் பங்கேற்று ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
07 மாத கர்ப்பிணியான அவர், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருந்த சக நாட்டு வீராங்கனையான பேட்டர்சனை வீழ்த்தி வெண்கலம் வென்றமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக விளையாட்டுத் துறையில் பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.