நுவரெலியாவில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் இன்று மாலை (19) நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகாமையில் உள்ள வீதியோரத்தில் விழுந்து கிடந்ததை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்து மருத்துவ உதவி அதிகாரிகள் குறித்த பெண் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு வீதியோரத்தில் கிடக்கும் பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலையக நிருபர் செ.திவாகரன்