இணை சுகாதார பட்டதாரிகளின் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இணைந்து இன்று (22) நடத்தவுள்ள போராட்டம் தொடர்பில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருதானை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் சுற்றுவட்டார வீதிகளில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மாளிகாகந்த நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி, இன்று காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஒன்று கூடி அதனைச் சூழவுள்ள வீதிகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளை பயன்படுத்த முடியாதவாறு மறித்து போராட்டம் நடத்துவதற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.