அவசர அவசரமாக இலங்கை வந்து இறங்கியுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர். என்ன நடக்கிறது?

 


இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் அவசர பயணமொன்றை மேற்கொண்டு இன்று (29) வியாழக்கிழமை இலங்கை வந்துள்ளதாக “தி இந்து“ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


தலைநகரமான கொழும்பில் அரசியல் தலைவர்கள் பலரை அஜித் தோவல், சந்திக்கவுள்ளதாகவும் இலங்கையின் சமகால, எதிர்கால அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


என்றாலும், அவருடைய குறித்த பயணம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் எதனையும் வெளியிடவில்லை.


கொழும்பு இராஜந்திர வட்டாரங்களை மேற்கொள் காட்டி 'தி இந்து' இச்செய்தியை வெளியிட்டுள்ளதுடன், உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் இணைந்து பல்வேறு அரசியல் சந்திப்புகளை தோவல் நடத்தவுள்ளதாகவும் 'தி இந்து' மேலும் கூறியுள்ளது.


இலங்கையில் எதிர்வரும் 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு 03 வாரங்களுக்கு முன்னர் இடம் பெற்றுள்ள அஜித் தோவலின் குறித்த பயணம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section