(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மாணவர்கள் இலங்கையில் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்து விட்டு, பின்னர் கனடா நாட்டில் அவர்களது மேற்படிப்பை தொடர்வது சம்பந்தமான கலந்துரையாடல் கொழும்பிலுள்ள மெட்ரோ பொலிடன் கல்லூரியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மெட்ரோ பொலிடன் கல்லூரியின் தவிசாளர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் கனேடிய வோட்டர் லூ பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி திருமதி ஒஸ்மன் உட்பட கல்லூரியின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருப்பதைப் படங்களில் காணலாம்.