கேட்பதற்கு என்னிடம் ஆயிரம் கேள்விகள் உள்ளன.

 


கலாநிதி. றவூப்ஸெய்ன்


சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையின் 76ஆண்டுகால வரலாற்றில் 

இலங்கைப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப எத்தகைய எதிர்கால நோக்கையோ திட்டங்களையோ கைக்கொள்ளாத, நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லாத, ,இனங்களுக்கிடையிலான அமைதியைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக இனவாதத்தை ஊட்டிவளர்த்து, ஊழல் மோசடி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கட்சிகளே இந்த நாட்டை மாறி மாறி ஆண்டன. ஆண்டு வருகின்றன.


லங்கா சமசமாஜ கட்சி முதற்கட்சியாயினும் சுதந்திரத்திற்குப்பிந்திய இலங்கையை பெறுப்பேற்ற ஐ . தேசியக்கட்சி, அதிலிருந்த பிரிந்த Swrd பண்டாரநாயக்க தலைமையிலான சுதந்திரக்கட்சி. இரண்டிலிருந்தும் பிரிந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,பின்னொரு காலத்தில் தோன்றிய கலவைக்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் உண்டான சின்னச்சின்ன முட்டுக்கொடுக்கும் கட்சிகள் அனைத்துமே ஊழலுக்கும் மோசடிக்கும் பெயர்போனவை. இது இந்த நாட்டிலுள்ள அனைவரும் அறிந்து வைத்துள்ள உண்மை.


ஆட்சியதிகாரத்தை இதுகாறும் கையேற்காத ஒரு மூன்றாவது சக்தி என்றால் அது NPP மட்டுமே. அது ஊழல் செய்ததில்லை. நாட்டைக்கொள்ளையிடவில்லை. வீண்விரயத்தையும் ஊழலையும் வெகுவாக எதிர்த்து நிற்கிறது. ஒப்பீட்டு ரீதியில் அதுதான் இப்போதைக்கு நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது செய்யும் கட்சிபோல் தெரிகிறது. கருத்துக்கணிப்புக்கள் அரசபுலனாய்வுத்துறை தரவுகள் அனைத்தும் அதுவே வெற்றி பெறும் வாய்ப்புள்ளதை பறைசாற்றி நிற்க,


எமது முஸ்லிம் சமூகத்தைப் பிரநிதித்துவம் செய்யும் கட்சிகள் ஏன் ஊழல் பேர்வழிக் கட்சிகளை ஆதரிக்க களம் இறங்கியுள்ளன?


தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section