வீதியில் பயணித்த காட்டு யானை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை பகமூன பிரதான வீதியின் பகமூன தமனயாய தம்புர பிரதேசத்தில் இந்த காட்டு யானை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (15) இரவு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பக்கமூன வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தது 35 வயதான 'ராஜா' என அழைக்கப்படும் காட்டு யானையாகும்.
குறித்த யானைக்கு ஒரு கண் பார்வை தெரியாது எனவும் கூறப்படுகிறது.
இந்த காட்டு யானையால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் முச்சக்கரவண்டியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, பொலிஸ் உத்தியோகத்தர்களை காட்டு யானையை தாக்க முற்பட்டதாகவும், இதனால் ரி56 ரக துப்பாக்கியால் காட்டு யானையை சுட்டுக்கொன்றதாகவும் பகமூன பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் காரணமாக நேற்று இரவு அப்பகுதி மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹபரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல தெரிவித்துள்ளார்.