2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் தொடர்பான நிபுணர் குழுவின் தலைவர் உதய செனவிரத்ன தெரிவித்தார்.
இதன்படி, குறைந்த தரங்களுக்கு 24% ஆகவும், மற்ற பதவிகளுக்கு 24% முதல் 35% ஆகவும் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் சம்பளத்தை அதிகரிக்கும் போது தகுதி, அனுபவம் மற்றும் அவர் தற்போது செய்து வரும் பணி குறித்து பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.