திருமணம் தொடர்பான பட்டப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ள பல்கலைக்கழகம்

 



சீனாவிலுள்ள சிவில் விவகாரப் பல்கலைக்கழகம் (Civil Affairs University) திருமணத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய இளங்கலை பட்டப்படிப்புக்கான கற்கை நெறியினை அறிவித்துள்ளது.


திருமணங்கள் தொடர்பான தொழில் மற்றும் கலாசாரம் குறித்து இப்பட்டப்பாடநெறியில் கற்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.


அத்தோடு, இப்பட்டக் கற்கை நெறியை தொடர்பவர்கள் துறைசார் வல்லுனர்களாக தயார்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருமண சேவைகள் மற்றும் மேலாண்மை" என்ற பாடத்திட்டம் செப்டம்பர் மாதத்தில் தொடங்குமென குறித்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


சீனாவில் தற்சமயம் திருமண விகிதம் குறைந்து வருகின்றமையானது, சமூக ஊடகப் பயனர்களிடமிருந்து சந்தேகம் மற்றும் விமர்சனங்களின் கலவையைத் தூண்டியது.


இது குடும்பத்துடனான ஆலோசனை, உயர்தர திருமண விழாவை திட்டமிடுதல், உறவுகளை கட்டியெழுப்புதல் போன்றவற்றைக் கற்பிக்கும் கற்கை நெறியாகும்.


நாட்டின் 12 மாகாணங்களைச் சேர்ந்த 70 இளங்கலை மாணவர்கள் இப்பாடநெறிக்காக உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகம் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section