ஊழல் , மோசடி அற்ற மக்கள் செல்வாக்கை பெற்ற தலைவரே சஜித் பிரேமதாச.

 



-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ் தௌபீக்


எமது நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து எழுந்து கொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில் மிக முக்கியமான ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியிருக்கிறோம். அரசியல் வரலாற்றில் அதிகளவான வேட்பாளர் போட்டியிடும் ஓர் தேர்தலாக இது காணப்படுவதுடன் வழமைக்கு மாறாக பலத்த போட்டியும் ஏற்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது. இத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஊழல் , மோசடி அற்ற மக்கள் செல்வாக்கை பெற்ற ஓர் தலைவராக சஜித் பிரேமதாச மாத்திரமே காணப்படுகிறார் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார்.


இன்று (21) ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,


இனம், மதம் மற்றும் மொழி வேறுபாட்டுகளை பார்த்து வாக்களிக்கக்கூடிய தேர்தலல்ல இத் தேர்தல். முழுமையா அனைவரும் நாட்டு நலனை மையப்படுத்திய சிந்திக்க வேண்டும் அப்போதுதான் நாம் எம் இலக்குகளை அடையலாம். மூவின மக்களும் சந்தோசமாக நிம்மதியாக வாழக்கூடிய நாட்டை உருவாக்குவதே இப்போதைய எமது தேவை இதனை நாட்டு மக்களும் அறிந்துள்ளார்கள். அதனை ஏற்படுத்துவதற்கான ஓர் தலைமையை உருவாக்குவதற்கான தேர்தலாகவே இத்தேர்தலை நாம் பார்க்கவேண்டியிருக்கிறது. அந்த தலைமைக்கு தகுதியானவர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச என்பதை இப்போது முழு நாடும் அறிந்துள்ளது என்றார்.


தற்போது நாட்டில் எரிபொருள் வரிசை,  எரிவாயு வரிசை இல்லாமல் போனாலும் நாடு இன்னும் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையவில்லை. எரிபொருள்,எரிவாயு மின்சாரம், நீர்கட்டணம் மற்றும் உணவுப் பொருட்கள் விலைக்கு பழைய நிலைக்கு முழுமையாக வரவில்லை.  அனைத்து கட்சிகளும் இணைந்தே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் நாட்டில் வரிசை யுகத்தை இல்லாமல் செய்தோம். இதற்கு தனிப்பட்ட எவரும் உரிமை கொள்ள முடியாது என்பதை எமது மக்கள் நன்கு அறிவார்கள்.


நமக்கு இப்போது தேவை சர்வேசத்தில் நன்மதிப்பை பெற்ற, ஊழல் இல்லாத ஒர் ஜனாதிபதியே அதற்கு தகுதியானவர் சஜித் பிரமதாச மாத்திரம் தான் சர்வதேச நாடுகளும் அவரது அரசாங்கத்திற்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும் அரசியலுக்கு பொய் சொல்லி மக்களை ஏமாற்ற வேண்டிய எந்த தேவையும் எனக்கில்லை எனவும் தெரிவித்தார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section