இன்ஸ்டாகிராமிற்கு தடை விதித்து உத்தரவிட்ட மத்திய கிழக்கு நாடு

 



சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராமை (Instagram) மத்திய கிழக்கு நாடான துருக்கி தடை செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய தகவல் தொடர்பு ஆணையம் தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.


ஆகஸ்ட் 02 ஆம் திகதி வெளியிடப்பட்ட உத்தரவின் பிரகாரம், துருக்கிய அரசாங்கம் இன்ஸ்டாகிராமை முடக்கியுள்ள போதிலும், குறித்த தடை குறித்து அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.


குறித்த உத்தரவைத் தொடர்ந்து, துருக்கியில் உள்ள பலரும் எக்ஸ் தளத்தில் (X) இன்ஸ்டாகிராம் feed ஏற்றப்படவில்லையென்று முறைப்பாடு செய்துள்ளனர்.



ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் (Ismail Haniyeh) மரணம் குறித்து மக்கள் வேடிக்கையான செய்திகளை வெளியிடுவதை இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா (Meta)தடுத்ததாகவும், துருக்கியின் ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஃபஹ்ரெட்டின் அல்டன் குற்றம் சுமத்தினார்.


இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 13 ஆம் திகதி இஸ்ரேல் நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்நிலையில் ஹனியே துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுக்கும் நெருக்கமானவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


துருக்கியில் இன்ஸ்டாகிராமில்  விதிக்கப்பட்டுள்ள தடையின் மூலமாக 05 கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


துருக்கியின் மொத்த மக்கள் தொகை சுமார் 8.5 கோடியாகும். அத்தகைய சூழ்நிலையில், துருக்கிய மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section