கிளப் வசந்த கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கைதான 17 பேரில் பெண் ஒருவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் கடந்த 23 ஆம் திகதியும் மற்றைய நபர் நேற்றும் (28) பாணந்துறை - பிங்வத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கிய காரின் சாரதியும் பிங்வத்த பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவில் கிளப் வசந்தவை இலக்கு வைத்து, துப்பாக்கிதாரிகள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த மற்றும் பிரபல பாடகி கே. சுஜீவாவின் கணவரான நயன வாசுல ஆகிய இருவரும் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.