மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா உட்பட பத்துபேர் பயணம் செய்துகொண்டிருந்த உலங்கு வானுர்தி காணாமல்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சௌலோஸ் கிளாஸ் சிலிமா என்ற 51 வயதுடைய துணை ஜனாதிபதியே இவ்வாறு காணாமல்போயுள்ளர்.
மலாவியின் - தலைநகரிலிருந்து பயணத்தை ஆரம்பித்த பின்னர் உலங்கு வானுர்திக்கான தொடர்பு அற்றுப்போயுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சாத்தியமான வேட்பாளராகக் கருதப்படும் சிலிமா, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2022 இல் கைது செய்யப்பட்டார்.
எவ்வாறாயினும், கடந்த மாதம் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மலாவி நீதிமன்றம் மறுத்து தீர்ப்பளித்தது.