மொட்டு கட்சியின் அரசியலமைப்பை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச(Wijeyadasa Rajapakshe) முற்றாக மீறியுள்ளதாகம் இதன் காரணமாக அவர் விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.
விஜயதாஸ ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சாகர காரியவசம் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் அரசியலமைப்பு
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் பெற்றதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மொட்டுக்கட்சியின் கட்சியின் அரசியலமைப்பை விஜயதாச ராஜபக்ச முற்றாக மீறியுள்ளதாக ஒழுக்காற்று சபையின் முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கத் தயார் எனவும் சாகர காரியவசம் கூறியுள்ளார்.