அபாய அறிவிப்பு! அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உரித்து அற்றது. அதைக்கோரவும் முடியாதுமேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு.





2016-2019 காலப்பகுதியில் அரச சேவையில் கடமையாற்றி 2020ஜனவரி முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய அதிகரிப்பு வழங்கப்படாமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த CA/writ/148/2020 ம் இலக்க வழக்கில் கடந்த06.06.2024 ம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பில் மிக முக்கியமான இரு விடயங்கள் நீதிமன்றினால்  சுட்டிக்காட்டப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது;


01. அரசாங்க ஊழியர்களுக்கு ஓய்வூதியம் என்பது உரித்தல்ல.அதை சட்டப்படி கோரமுடியாது.


02. அரசாங்கத்தின் கொள்கை ரீதியானதீர்மானங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது.


இந்த இரண்டு தீர்மானங்களையும் வைத்து ஆராய்கின்ற போது இனிமேல் அரசாங்க ஊழியர்களுக்கு ஓய்வூதியம் என்பது ஒரு கட்டாயம் அல்ல. அது ஒரு பிச்சைக்கொடுப்பனவு. அரசு விரும்பினால் மட்டும் கொடுக்கலாம். அரச துறையில் நியமனம் வழங்கும் போது வழங்கப்படும் நியமனக் கடிதங்களில் இப்பதவி ஓய்வூதிய உரித்துடையது என்ற பதம் சேர்க்கப்படத் தேவையில்லை.


அரசாங்க ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கு அவர்கள் சேவையில் இருக்கும் சமயம் ஓய்வூதிய பங்களிப்புத் தொகையாகபெருந் தொகைப்பணம் ஓய்வூதிய திணைக்களத்தினால் கட்டாயப்படுத்தப்பட்டு அறவிடப்படுகிறது.


ஓய்வூதியம் உரிமை இல்லையென்றால் இப்பங்களிப்பு பணத்தை எவரிடமும் கட்டாயப்படுத்தி அறவிட வேண்டியதொரு அவசியமில்லை. செலுத்தவேண்டிய தேவை ஏற்படாது.இனிமேல் அரசதுறை வேலை வாய்ப்பைநாடவேண்டிய தேவையும் நமக்கு ஏற்படாது.


"கோழி மேய்க்கிறதென்றாலும் அரசாங்க த்தில் மேய்க்கணும்" என்ற பழமொழி இனி பொய்மொழியாக போய்விட்டது.


இனி அரசுக்கெதிராக நீதிமன்றங்களில்வழக்காடி நீதியை பெற முடியுமென்ற நம்பிக்கையும் இல்லாமலாகி விட்டது. அரசாங்கமும் நீண்டகாலமாக அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்தி விடதருணம் பார்த்திருந்தது. இதற்கு தற்போதுவ ழங்கப்பட்டுள்ள தீர்ப்பும் சாதகமாயிற்று.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section