சிறுவனை கொடூரமாக தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

0

 


 - கடும் ஆத்திரத்தில் மக்கள்


சமூகவலைத்தளங்களில் பரவிய வீடியோ ஒன்றில் சிறுவனை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இன்று அதிகாலை புல்மூட்டை அரிசிமலை பகுதியில் தாக்குதல் மேற்கொண்ட நபரும் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.


தாக்குதலுக்கு உள்ளான நான்கரை வயதுடைய சிறுவன் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


சிறுவர் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபருக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பல சமூக ஊடக பயனர்கள் பொலிஸாரை வலியுறுத்திய நிலையில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றது.


4 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, பொலிஸார் விசாரணையை தொடங்கியிருந்தனர்.


பதவிய, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரே குழந்தையை கொடூரமாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.


இந்த நபர் சிறுவனை கொடூரமாக தாக்குவதை அயல் வீட்டார் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.


அதற்கமைய, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்வதற்காக அவரது வீட்டை சுற்றிவளைத்திருந்தனர்.


எவ்வாறாயினும், சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.


அப்பகுதியில் குகுல் சமிந்த அல்லது பிபிலே சமிந்த என அழைக்கப்படும் நபர் சிறுவனை கொடூரமாக தாக்கிய பின்னர் தலைமறைவாகியிருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top