பலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்து அறிவிப்பு வெளியானது

 



பாலஸ்தீனத்தின் காஸா, ரஃபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் கடந்த 09 மாதங்களாக நடாத்தி வரும் தாக்குதலில் இதுவரை 37,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியானவர்களின் பட்டியலில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகளே உள்ளடங்குகின்றனர்.


பல ஐரோப்பிய நாடுகளின் கருத்தின் பிரகாரம் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்குவதே பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையேயான மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்துள்ளது.


இந்த நிலையில், ஆர்மீனியா நாடும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து உத்தியோகபூர்வ அறிவிப்பை வுளியிட்டுள்ளது. இது தொடர்பாக, ஆர்மீனியாவின் வெளியுறவுத் திறை அமைச்சு தெரிவிக்கையில், இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கிடையிலான மோதலை தீர்ப்பதற்கு பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதே தீர்வாகும் என்று கூறியுள்ளது.



 




இதன்பிரகாரம், ஏற்கனவே அயர்லாந்து, ஸ்பெயின், நோர்வே போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 


முன்னராக, கடந்த 2011 ஆம் ஆண்டில் பாலஸ்தீனம் ஒரு நாடாக செயல்படுவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளதாக உலக வங்கி கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section