இதை வாசித்தால் கொஞ்சம் சிரிக்கலாம்




S.M.Z.சித்தீக்


இந்த முதியவர், தனது கீழ்த்தாடையில் மெர்சிடிஸ் கார் நிறுவனத்தின் சின்னத்தை ஒத்த ஒரு சின்னம் வெளிப்பட்டிருப்தாகச் சொல்லி, அந்த நிறுவனத்திடம் ஒரு மெர்சிடிஸ் காரை பரிசாகக் கோரி கடிதம் எழுதியுள்ளார். 


அதற்கு மெர்சிடிஸ் நிறுவனம்; இல்லை, உங்களிடம் உள்ள அடையாளம் தலைகீழாக 

இருப்பதால் டொயோட்டா நிறுவன சின்னம் போலவே உள்ளது என்பதாகச் சொல்லி காரை பரிசாக கொடுக்க மறுத்துள்ளது. 


உடனே முதியவர் டொயாட்டா நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். டொயாட்டா நிறுவனமும், குறித்த அடையாளம் மஸ்டா கார் நிறுவன சின்னம் போல் உள்ளது என்று சொல்லி காரை பரிசாக கொடுக்க மறுத்துள்ளது. 


மஸ்டா நிறுவனமும் உங்களிம் உள்ள அடையாளம் எங்கள் சின்னத்துக்கு ஒத்ததாக இல்லை என்று சொல்லி கார் பரிசு கொடுக்க மறுத்துவிட்டது. 


நம்பிக்கை இழந்த முதியவர் முயற்சிகளை கைவிட்டுள்ளார். திடீரென ஒரு நாள் இலங்கையில் உள்ள ஒரு செருப்புத் தொழிற்சாலையில் இருந்து கோல் வந்திருக்கிறது. தாங்கள் கீழ்த்தாடை அடையாளம் எங்கள் செருப்பின் சின்னத்தை அப்படியே ஒத்திருப்பதாகவும் தங்களுக்கு ஒரு ஜோடி செருப்பு பரிசாக காத்திருக்கிறது என்றும் நற்செய்தி கூறியுள்ளது.


நன்றி: இம்ரான் பாறூக்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section